இந்தியாவின் 69வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், கடந்த 68 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழாவில் 10 நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடுடு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இம்முறை ஆசியன் அமைப்பின் மியான்மர், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், புருனே என 10 நாடுகள் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ள விழாவில் இந்தியா தனது ராணுவம், கலாச்சார பலத்தின் அணிவகுப்பை நடத்திக்காட்டவுள்ளது. இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு விஐபி.,க்கள் அமரும் மேடை 100 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது🤗. அதனை அடுத்து, குடியரசு தின அணிவகுப்பு 90 நிமிடங்கள் நடக்கும். இதில் 23 ஓவியங்களில் 2 ஆசியன் நாடுகளின் கல்வி, வர்த்தகம், கலாச்சாரம், மதம் உள்ளிட்டவற்றை குறிக்கும். சிறப்பு அம்சமாக பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஆகாஷ் ஆகிய ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. எல்லை பாதுகாப்பு படையின் 113 பெண்அதிகாரிகளின் மோட்டார் சாகசமும் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தின அணிவகுப்பு-10 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு
68
previous post