Home » ​பேருந்து கட்டண உயர்வு குறித்த மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்

​பேருந்து கட்டண உயர்வு குறித்த மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்

0 comment

பேருந்து கட்டண உயர்வு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், இதில் தலையிட முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இந்த திடீர் உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதனை எதிர்த்து மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து பலவித போராட்டங்கள், சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் இந்த முடிவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது.  

இதனை விசாரித்த நீதிமன்றம், “பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தது. பல்வேறு பொருட்களின் விலை உயர்கிறது. ஒவ்வொன்றிலும் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்” என கேள்வி எழுப்பியது. இதனால் தமிழக அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இதுதொடர்பாக 🏛உச்சநீதிமன்றம் பல அறிவுரைகளை தமிழக 🏛அரசிற்கு வழங்கியதாகவும் கூறியுள்ள நீதிமன்றம், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரானமனுவை தள்ளுபடி செய்தது. அனைத்து பேருந்துகளிலும் புதிய கட்டண அட்டவணையை ஒட்டுமாறு 🏛தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter