Home » குவைத்தில் பல ஆண்டுகளுக்கு பின் பொதுமன்னிப்பு!!!

குவைத்தில் பல ஆண்டுகளுக்கு பின் பொதுமன்னிப்பு!!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- விசா காலாவதியாகி சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்காக குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது பொது மன்னிப்பு.

சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 ந்தேதிக்குள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பி விடலாம்.

1. தங்களுடைய விசாவை புதிப்பித்துக்கொள்ள விரும்புபவர்கள் அபராதம் கட்டி, எந்த ஒரு விசாரனையும் இல்லாமல் புதுபித்துக்கொள்ளலாம்.

2. அபராதம் ஏதும் கட்டாமல் நாட்டைவிட்டு வெளியேறலாம்.

3. நாட்டைவிட்டு வெளியேறுபவர்கள் திரும்பிவர வாய்புள்ளது.

4. இப்படி வெளியேற விரும்புகிறவர்களுக்கான நடைமுறைகள் அனைத்தும் விமான நிலையத்திலேயே வேறெந்த ஒருவரின் ஒப்புதலும் இல்லாமல் அனுப்பிவைக்கப்படுவர்.

நாட்டைவிட்டு வெளியேற தடை அல்லது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு பொருந்தாது.

குறிப்பு: இந்த பொதுமன்னிப்பு சட்டம் பல வருடங்களுக்கு பின் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பிறகு எப்போது வரும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தாயகம் திரும்பி விடுங்கள்.

தகவல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
குவைத் மண்டலம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter