75
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை 69வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஹாஜி. S.M.A.அக்பர் ஹாஜியார் அவர்கள் கொடியேற்றினார்.
இந்த குடியரசு தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், சுகாதார மேம்பாட்டில் கடற்கரை தெரு முன்னுதாரணமாக திகழவேண்டும் என உரையாற்றி உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில், ஜமாத் தலைவர் அஹமது அலி, JJ.சாஹுல் ஹமீது(சாவண்ணா),முகமது அலி(அல்-நூர் ஹஜ் சர்வீஸ்),பேரூராட்சி SI. அன்பரசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.