18
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(26/01/2018) காலை கடற்கரை தெரு பகுதியில் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மூன்று குப்பைகூண்டுகள் வைக்கப்பட்டது.
கடற்கரை தெரு பகுதியில் முக்கியமான பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டது.
அதிரையில் தூய்மை இந்தியா திட்டத்திற்க்கு முன்னுதாரணமாக கடற்கரை தெரு அமையும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில்,அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன்,JJ. சாஹுல் ஹமீது(சாவண்ணா),கடற்கரை தெரு ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.