19
சவூதி அரேபியா ஜித்தா மாநகரில் ஏராளமான அதிரை குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இவர்களின் குழந்தைகள் அங்குள்ள பள்ளிகூடங்களில் மார்க்க கல்வியுடன் கூடிய உலக கல்வியையும் சிறப்புடன் பயின்று பல்வேறு கேடயங்களை பெற்று நாட்டிற்க்கும், ஊருக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் ஜித்தாவில் இயங்கும் அய்டாவின் தலைவர் அஜீஸ் அவர்களின் மகன் ஜைப் நூறுமீட்டர் மற்றும் இருநூறு மீட்டர் போட்டியில் கலந்து கொண்டு மூன்று தங்க கேடயங்களை வென்றுள்ளார். இதேபோல் இன்னொரு மகனான அப்துல் பாசித் பால் கேதரிங் போட்டியில் வென்று கேடயம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.