Home » தடைகளை மீறி சாதனை படைத்த தமிழக மாணவி…!

தடைகளை மீறி சாதனை படைத்த தமிழக மாணவி…!

by
0 comment

 

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறையை மத்திய அரசு கொண்டு வந்தபிறகு, தமிழக மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு எட்டா கனியாகிவிடுமோ என்று தமிழகம் அங்கலாய்த்து கொண்டிருக்கும்போது…..நம் தமிழகம் எதற்கும் சளைத்ததல்ல என்று நிரூபிக்கும் வகையில், தமிழக மாணவி கதிஜாதுல் ஹிதாயா நாட்டிலேயே நீட் தேர்வில் அதிக மார்க்குகள் பெற்று முதல் மாணவியாக சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மத்திய அரசின் நீட் தேர்வு முறை பல சிறந்த மாணவர்களுக்கு கூட சோதனை களமாகி போனாலும் அதுவும் ஏழை எளிய அடித்தட்டு மாணவர்கள் வாழ்க்கையில் கஷ்டம் கொடுத்தது என்பதும் அறிந்ததே.
இருந்தபோதிலும் சோதனையிலும் சாதனை படைக்க தமிழகம் எந்த நேரத்திலும் தவறியதில்லை என்பதற்கு சான்று ..தமிழகத்தில் லால்பேட்டை ஊரை சேர்ந்த “கதிஜாதில் ஹிதாயா” வின் நீட் தேர்வு சாதனை. தடைகளை மீறி சாதனை படைப்பது என்பது நம் தமிழகத்தின் பண்பாட்டில் ஒன்றாகும். வாழ்த்துவோம் அந்த மாணவியை…
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter