48
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று(24/02/2018) மாலை 4:30மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்தில் PFI அமைப்பை தடை செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட தலைவர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அதன் பின்னர் SDPI கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில செயலாளர் நிஜாமுத்தீன் அவர்கள் கண்டன கோஷங்களை எழிப்பினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக & மமக தஞ்சை மாவட்ட தலைவர் அகமது ஹாஜா,மமக மாநில ஊடக பிரிவு செயலாளர் பவாஸ் கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.