68
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அதிரை சூற்றுசூழல் மன்றம் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இனைந்து வைக்கபட்ட குப்பை கூண்டுகள் தொடர்நது மர்மநபர்களால் எரிக்கபட்டு வருகின்றது.
இன்று (25-02-18)ஞாயிற்றுகிழமை காலை அதிரை ஆஸ்பத்திரி சாலையில் வைக்கப்பட்டிருந்த குப்பை கூண்டினை எரித்துள்ளனர். ஊர் நலன் கருதி அதிரை முழுவதும் குப்பை கூண்டுகள் அமைத்து வருகின்றனர் ஆனால் ஒரு சில பேர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் கடந்த மாதமும் குப்பை கூண்டு எரிக்கபட்டது குறிப்பிடதக்கது.
தகவலறிந்து வந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தீயை அணைத்தனர். இதில் தீயை அணைப்பதற்கு அருகில் அமைந்திருக்கின்ற வீடுகளில் தண்ணீர் கேட்டபொழுது கொடுக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.