தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று (02/04/18) மாலை காவேரி மேலாண்மை அமைக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், விரைவில் காவேரி வாரியத்தை அமைக்க கோரியும் பல இடங்களில் பல்வேறு கட்சி சார்பிலும் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் இன்று மாலை 3.00 மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பழ.சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ராவண பிரபு, மாவட்ட பொருளாளர் ஏ.ஜே ஜியாவுதீன், பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இராசேந்திரன் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமானோர் கலந்துகொண்டனர்.