Home » அமீரகத்தில் நடைபெற்ற TIYAவின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

அமீரகத்தில் நடைபெற்ற TIYAவின் புதிய நிர்வாகிகள் தேர்வு !

0 comment

அமீரக TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு 06.04.2018 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் வழமைபோல் துபையில் சகோதரர் N. சேக்காதி அவர்களின் இல்லத்தில் அமீரக தலைவர் N. முகமது மாலிக் அவர்கள் தலைமையிலும் நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையிலும் நிர்வாகிகள் தேர்வு சிறப்புற நடைபெற்றது.

இந்தப் பொதுக்குழு S. மீரா முகைதீன் அவர்களின் கிராஅத்துடன் துவங்கியது அதனை தொடர்ந்து சகோதரர் S. மீரா முகையிதீன் அவர்கள் வரவு செலவு விபரங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் முன் சமர்ப்பித்து விளக்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், கடந்த 2017 முதல் 2018 மார்ச் வரையில் TIYA ஆற்றியுள்ள சேவைகள், குறித்தும் இனி தொடரவுள்ள சேவைகள் என அனைத்தும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டதுடன் இப்பெரும் சேவைகளை துடிப்புடன் செய்து வந்த அமீரக நிர்வாகள் மற்றும் தாயகத்தின் TIYA நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூறப்பட்டனர்.

முஹல்லா வாசிகள் முன்னிலையில் அமீரக TIYA வின் முன்னால் நிர்வாகம் களைக்கபட்டு கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: N.M.S.சேக்பரீது
துணைத் தலைவர்: S. நவாஸ்
செயலர்: M. சாகுல் ஹமது
துணைச் செயலர்: N.K.S. நூருதீன்
பொருளாளர்: N. அல்அமீன்
இணைச் பொருளாளர்: M. முகமது அலி
இணை செயலர்கள் : M.முகமது இல்யாஸ், M.முகமது சலீம்

நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் நமது  முஹல்லா வாசிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கஃபாரா துஆவுடன்நி்றைவடைந்தது.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter