Home » அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் மற்றும் தீர்மானங்கள்..!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் மற்றும் தீர்மானங்கள்..!

0 comment

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பைத்துல்மால் ரியாத் கிளையின் 56வது மாதாந்திர கூட்டம் சென்ற 13/04/2018 அன்று ஹாராவில் நடைபெற்றது.

இந்த மாதாந்திர கூட்டத்தை கிராத் ஓதி அகமது அஸ்ரப் (துணை தலைவர்) அவர்கள் துவங்கி வைத்தார்.

இந்த கூட்டத்திற்கு A.M.அஹமது ஜலீல் (துணை செயலாளர்) அவர்கள் முன்னிலையில், A.அபூபக்கர் (பொருளாளர்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இந்த மாதாந்திர கூட்டத்தில் அப்துல் ரஷீது (செயலாளர்) அறிக்கையை வாசித்தார்.

தீர்மானங்கள்:

1) வரும் ரமலான் மாதம் மெகா கூட்டமும் 5-ம் வருட இஃப்தார் நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடுகள் விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொறுப்புதாரிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

2) ரமலான் மாதம் பிறை 3-அன்று (18/05/2018) வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5 மணியளவில் வழக்கம் போல் பத்தாவில் உள்ள கிளாசிக் ஆடிட்டோரியத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அதிரை அனைத்து முஹல்லா வாசிகள் அனைவர்களும் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) அடுத்தமாதம் மெகா கூட்டத்திற்கான சிறுவர்களின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவமாக அமைவதால் தங்கு தடையின்றி தங்களின் குழந்தைகளின் பெயர்களை பொறுப்புதாரியான சகோ.சேக் மன்சூர் (MOB:0548880956) அவர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

4) மே மாதம் 4,5,6 ஆகிய தேதிகளில் நமதூரில்(அதிரையில்) பைத்துல்மால் சார்பில் நடைபெற இருக்கும் 15-வது குர்ஆன் மாநாடு மற்றும் அதிரை பைத்துல்மாலின் 25-வது வெள்ளிவிழா மற்றும் வெள்ளிமலர் வெளியீடு விழா சிறப்பாக நடைபெற அதிரை அனைத்து ஜமாத்தினர்களின் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) ID CARD விஷயமாக விடுபட்ட உறுப்பினர்களின் புகைப்படம் மற்றும் ADDRESS விவரங்களை இன்னும் ஒரு வாரத்தில் அப்துல் மாலிக் அவர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு நினைவூட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரை சாதிக்(இணை தலைவர்) அவர்கள் வழங்கினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter