தலைசிறந்த உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் பொறுமையிழந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து மக்கள் மத்தியில் மீதமுள்ள ஒரு நீதிபதியான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றம் சுமத்தினர். (இது இந்தியாவையே உலுக்கியது)
பிஜேபி தலைவர் அமித்ஷா வின் வழக்கை விசாரித்து நேர்மையாக தீர்ப்பளிக்க இருந்த நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்துப்போனார்… அவரது குடும்பம் மொத்தமும் மரணத்தில் சந்தேகம் என குற்றம் சுமத்தினர். போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் கூட மாரடைப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை என தெளிவாக கூறிவிட்டது.
ஆனாலும் மர்மங்கள் நிறைந்துள்ள இந்த மரணத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டும் எந்த சந்தேகமும் இல்லையாம். அதனால் வழக்கை முடித்துவிட்டது.. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் இனி இந்த வழக்கை விசாரிக்கவே கூடாதாம்… (இப்படி ஒரு தீர்ப்பை எங்கையாவது பார்த்ததுண்டா?)
அடுத்து மற்றுமொரு இரண்டு நீதிபதிகளான குரியன் ஜோசப் மற்றும் நீதிபதி செல்லமேஸ் ஆகியோர் பகிரங்கமாகவே நீதித்துறையின் அவலங்களை கண்டித்து கடிதம் எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்விலேயே லஞ்சமாக பணம் வாங்கப்பட்டுள்ளதாக CBI யால் முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் நீதிபதி ஒருவரே இடைத்தரகராக இருந்து ஒரு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த அவலமெல்லாம் நீதித்துறையில் அரங்கேற்றப்படுகிறது.
சமீபத்தில் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி தமிழர் கர்ணன் அவர்கள் நீதிபதிகளின் ஊழல்களை சொன்னபோது அவருக்கு எதிராக சில நீதிபதிகள் கூடி நீதிபதி கர்ணன் அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் நீதி வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
ஆக இவ்வாறு தொடர்ந்து இந்திய நீதித்துறையின் மீது கரும்புள்ளிகள் விழுந்துவருகின்றன.
அதன் உட்சபட்சமாக சுதந்திர இந்தயாவில் முதல்முறையாக தற்போது எதிர்கட்சிகள் ஒன்றினைந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றக்கோரி தீர்மானத்தை துணை குடியரசு தலைவரிடம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இது நீதித்துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது.
முத்துப்பேட்டை
M.a.k.Vazeer Ahamed