Home » அறிமுகமாகிறது 100 பந்து கிரிக்கெட் போட்டி;2020 முதல் துவக்கம்..!!

அறிமுகமாகிறது 100 பந்து கிரிக்கெட் போட்டி;2020 முதல் துவக்கம்..!!

0 comment

2020ம் ஆண்டு முதல் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், புதிய 8 அணிகள் கொண்ட உள்ளூர் தொடரை இங்கிலாந்து அறிமுகம் செய்கிறது.

வழக்கமான டி20 போட்டியில் இருந்து மாறுபடும் இப்போட்டியில் 20 பந்துகள் குறைவாகவே இப்புதிய தொடரில் வீசப்படும். 15 ஓவர் போட்டியான இதில், கடைசி ஓவரில் மட்டும் 10 பந்துகள் வீசப்படும்.

மேலும் போட்டியை நடத்துவதற்கான இடங்களையும் இங்கிலாந்து தேர்வு செய்துள்ளது. மான்செஸ்டர், கார்டிஃப், சௌதாம்ப்டன், பிர்மிங்காம், லீட்ஸ், லண்டன் மற்றும் நாட்டிங்காம் ஆகிய இடங்கள் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

2003ம் ஆண்டு டி20 போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, முன்னாள் வீரர்கள் அப்போட்டிக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது உலகளவில் டி20 கிரிக்கெட் போட்டிக்கு அதிகளவில் வரவேற்பு கிடைத்திருப்பது நம்பமுடியாத விஷயமாக அமைந்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter