Home » தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டத்தை குறிவைத்து துணை ராணுவம் குவிப்பு!!!

தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டத்தை குறிவைத்து துணை ராணுவம் குவிப்பு!!!

by
0 comment

மாநில அரசுக்கே தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை ராணுவப்படையினர் இந்த மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் ஆங்காங்கே தங்கியுள்ளனர். துணை ராணுவத்தினர் இந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டது குறித்து மாநில அரசுக்கும் தகவல் இல்லை என்றும் சொல்கிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டப் பணிகளை முடுக்கி விடுவதற்காக விரைவில் உயர் அதிகாரிகள் வர உள்ளதாகவும் இயந்திரஙகளும் கொண்டு வரப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்தால் அடக்குவதற்காக துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மற்றும் கூத்தாநல்லூர் கிராமங்கிளில் தமிழக போலீஸாருடன் இணைந்து மத்திய போலீஸ் படையினர் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.

தமிழக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ”நாங்கள் துணை ராணுவத்தினரை அழைக்கவில்லை. எந்த உதவியும் கேட்கவில்லை. அவர்கள் இங்கே எதற்காக வந்திருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை” என்கின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter