Home » கர்நாடக சட்டசபைத் தேர்தல் : வேட்பாளர்களை திரும்பப் பெற்றது எஸ்டிபிஐ!!

கர்நாடக சட்டசபைத் தேர்தல் : வேட்பாளர்களை திரும்பப் பெற்றது எஸ்டிபிஐ!!

by
0 comment

கர்நாடக சட்டசபைத் தேர்தல் : வேட்பாளர்களை திரும்பப் பெற்றது எஸ்டிபிஐ!!

மூன்று தொகுதியில் மட்டும் போட்டி என அறிவிப்பு!!!

பெங்களூரூ:
பா.ஜ.க. அதிகாரத்திற்கு வருவதை தடுக்க மூன்று இடங்களைத் தவிர எல்லா இடங்களிலும் வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றுள்ளது எஸ்.டி.பி.ஐ.

வரவிருக்கும் கர்நாடக தேர்தலில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அறிவித்த சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) அதன் வேட்பாளர்களை திரும்பப்பெற முடிவு செய்துள்ளது. தேசிய அரசியல் அமைப்பான எஸ்.டி.பி.ஐ., மூன்று இடங்களைத் தவிர, முக்கிய இடங்களான பந்த்வால், சர்வக்ஞங்கர் மற்றும் ஹெப்பால் உட்பட அனைத்து இடங்களிலும் தனது வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றது. SDPI இப்போது மைசூரில் நரசிம்மராஜா, பெங்களூரில் உள்ள சிக்பெட் மற்றும் களுபரகி வடக்கு ஆகிய இடங்களில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

“ஆரம்பத்தில் 25 இடங்களில் போட்டியிட முடிவு செய்தோம், ஆனால் நமது சித்தாந்த போட்டியாளரான பா.ஜ.க. அதிகாரத்திற்கு வருவதை நிறுத்திவிட வேண்டும்.” “வகுப்புவாதக் கட்சிகள் முடக்கப்படுவதை உறுதி செய்வதே எங்கள் நிலைப்பாடு” என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் தெரிவித்தார். பாந்த்வால், சர்வங்கநகர், ஹெப்பல் மற்றும் மங்களூரு வடக்கு ஆகிய இடங்களுக்கு வேட்பாளர்களின் பட்டியலை கட்சி அறிவித்திருந்தது அதை தற்போது திரும்ப பெறுவது, காங்கிரஸ்க்கு சாதகமாக அமையும்.

எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக நாம் பிரச்சாரம் செய்வோமா என்பதை முடிவு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter