Home » ரமலான் ஸ்பெசல்~சமோசா செய்வது எப்படி?

ரமலான் ஸ்பெசல்~சமோசா செய்வது எப்படி?

0 comment

சமோசா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

மைதா மாவு : 125 கிராம்

வற்றல்பொடி : 1½ தேக்கரண்டி

உருளை கிழங்கு : ½ கிலோ

மஞ்சள்பொடி : ¼ தேக்கரண்டி

பச்சைபட்டாணி : 100 கிராம்

பெரிய வெங்காயம் : ¼ கிலோ

மல்லிஇலை : 25 கிராம்

பச்சைமிளகாய் : 2

கடலை எண்ணெய் : ¼ கிலோ

இஞ்சி : சிறுதுண்டு

சீரகம் : ½ தேக்கரண்டி

கரம் மசாலா : 1 தேக்கரண்டி

முந்திரிபருப்பு : 1 தேக்கரண்டி

உலர்ந்ததிராட்சை : 1 தேக்கரண்டி

உப்பு : தேவையானது

கான் ப்ளார் மாவு : 3 தேக்கரண்டி

தாளிக்க‌

சீரகம் : ½ தேக்கரண்டி

கடுகு : ½ தேக்கரண்டி

கருவேப்பிலை: 1 கொத்து

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக வெட்டிக் கொள்ளவும். கான் ப்ளார் மாவை தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

வேக வைத்து மசித்த‌ உருளைக்கிழங்குடன் பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, வற்றல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான உப்பு, கரம் மசாலா வேக வைத்த பச்சை பட்டாணி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, மல்லி ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து பின் கலவையை நன்கு வதக்கி பின்னர் ஆறவைக்கவும்.

பிறகு மைதா மாவுடன் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு, தேவையான உப்பும் போட்டு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.

இந்த மாவை சப்பாத்திகளாக திரட்டி தோசைக் கல்லில் போட்டு சப்பாத்தியின் இருபுறமும் லேசாக வேக வைத்து ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒவ்வொரு பகுதியையும் கூம்பு வடிவமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்கு கலவையை நிரப்பி லேசாக விரலில் கான் ப்ளார் மாவுக் கரைசலைத் தண்ணீர் தொட்டு ஒரங்களை மடித்துக் கொள்ளவும். பின்பு எண்ணெயில் போட்டு பொன் நிறமாகப் பொரித்து எடுத்துக்கொள்ளவும். சுவையான சமோசா ரெடி!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter