அதிரை எக்ஸ்பிரஸ்:- தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொது மக்களை சுட்டு கொலை செய்த எடப்பாடி அரசை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 11 பேர் இறந்ததை கண்டித்து இன்று (23/05/2018) காலை 11 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் துரை.சந்திர சேகரன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுனர்.
அப்பாவிகளின் கொலையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பின.