212
அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சில் சில் மழை
தஞ்சை மாவட்டம் அதிரை பகுதியில் இன்று (06.06.2018) மாலை 06.30 மணிமுதல் மழை பெய்து வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தமிழக பகுதியில் கடந்த சில நாட்களாக மழை, இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
அதேபோல் இன்று மாலை முதல் அதிரை,பட்டுக்கோட்டை அதன் சுற்றுயுள்ள கிராம பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
விடாமல் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் தண்ணீர் மேடுபகுதியில் தேங்கி நிற்கும் சூழல் உருவாகியுள்ளது,தற்பொழுது பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து வெளியேறுவதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்கின்றது.