Home » அதிரை அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?? இதோ உண்மையான தகவல்…

அதிரை அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?? இதோ உண்மையான தகவல்…

by
0 comment

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் மருத்துவமனையில் கண்ணாடிகளை உடைக்கப்பட்டுள்ளது என செய்தி பதிந்தோம் மற்றும் நமது தளத்தில் CCTV வீடியோ வெளிட்டோம்.

இந்த CCTV வீடியோவில் பதிவாகி உள்ள இளைஞர்கள் நமது நிருபர்களிடம் பேசினார்கள் அப்போது இளைஞர்கள் மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவத்தை கூறினார்கள்.

கடந்த (06-06-2018) இரவு 12.45 மணியளவில் முபீஸ் என்ற இளைஞன் விபத்து ஆயிட்டான் சொல்லி தகவல் வந்தது உடனடியாக நாங்கள் அனைவரும் பார்ப்பததற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றோம்.

அங்கு அந்த இளைஞன் வெளியில் அமர்ந்து இருந்தான் அப்போது நாங்கள் என்ன நடந்தது என்று விசாரித்தோம் பதில் சொல்லாமல் கோவமாக இருந்தான் நாங்கள் செல்வதற்கு முன்னாடியே செவிலியர்களும் இந்த இளைஞன்க்கும் பிரச்சனை நடந்து உள்ளது ஆனால் என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியாது.

மீண்டும் அந்த செவிலியர் மனமிறங்கி இங்க வாங்க முதலுதவி செய்றன்னு சொல்லி அழைத்து இருக்காங்க அப்போது உதவ சென்ற இளைஞர்கள் அந்த முபீஸ் என்ற இளைஞரை உள்ளே அழைத்து போகும்போது முபீஸ் போதையில் அந்த செவிலியர் மேல இடிப்பது போல போய் இருக்கான் அப்போது கோபம் அடைந்த செவிலியர் நீ அக்கா தங்கச்சியோட வளரலையா உனக்கு எல்லாம் முதலுதவி அளிக்க முடியாது என்று பேச மீண்டும் போதை தலைக்கேறி செவிலியரை அடிக்க முயற்சி செய்கிறான் அப்போது அங்கு பார்க்க சென்ற இளைஞர்கள் தடுத்து வெளியில் அழைத்து வரும்போது கோபத்தில் கண்ணாடியை உடைத்து விட்டான் முபீஸ்.

இந்த பிரச்சனைக்கு முழு காரணம் அந்த முபீஸ் என்ற ஒரு இளைஞன் தான் மனிதநேய அடிப்படையில் உதவ சென்ற எங்களுடைய புகைப்படம் தவறான பார்வையில் பரப்ப ப்படுகிறது.

மேலும் இவர்கள் அந்த செவிலியர்களிடம் கேளுங்கள் நாங்கள் தவறு செய்தோமா? என்றும் அல்லாஹ் மேல் ஆணையிட்டு சொல்லுகிறோம் அந்த கண்ணாடியை உடைத்தும் ஆபாசமாக பேசியும் தவறாக நடந்தது முபீஸ் மட்டும் தான் .

நாங்கள் எதுவும் செய்ய வில்லை என்கிறார்கள் உதவ சென்ற சகோதர்கள்.

மேலும் இந்த சம்பவம் நடக்கும் முன் அனைவரும் தொழுகையை முடித்து விட்டு எங்கள் வீட்டுக்கு அருகில் தான் இருந்தோம் இது எங்கள் பெற்றோர்களுக்கும் தெரியும் என்கிறார்கள் .

நமது தளத்தில் வெளிடப்பட்ட அதிரை அரசு மருத்துவமனை CCTV வீடியோ தற்போது இளைஞர்களின் நலன் கருதி நீக்கிவிட்டோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter