உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து இன்று ஜப்பானிலும் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஜப்பானில் உள்ள அதிரையர்கள் அனைவரும் நோன்பு பெருநாள் கொண்டாடிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.