அதிரை எக்ஸ்பிரஸ்:- மத்திய அரசின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட இருக்கிறது.பல மாத இழுபறிக்கு பின் எய்ம்ஸ் அமைய போகும் இடத்தை மத்திய,மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது
மதுரை தோப்பூரில் 200 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன மருத்துவமனை அமைய உள்ளது
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றார்.