அதிரை – பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் பட்டுக்கோட்டை சாலை RKP முக்கத்தில் இருந்து மூன்று முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைப்பிரிவுகள் உள்ளன.
பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை , ஆலங்குடி போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிராம்பட்டினம் செல்லாமல் சுற்றுவட்ட பாதைகளில் செல்ல
RKP முக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதனிடையே இந்த பகுதியின் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு நடுவே கட்டிட பிரிவுகள் ஏற்படுத்தபட்டுள்ளன.
இப்பகுதியில் அவ்வப்போது சாலை விபத்து எற்பட்டு பல உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளது.
இவைகளை கருத்தில் கொண்டு தற்போது இருளில் இருக்கும் மேற்கண்ட RKP முக்கத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.