109
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் கரையூர் தெரு நுழைவாயிலில் அமைந்துள்ள பீயத்து பாலம் அருகே அமைந்திருக்கும் மின்கம்பம் (TP267) பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
மின்கம்பமானது பழுதடைந்து பல மாதங்களாகிவிட்டது இதனை மின்சார வாரியம் கவனத்தில் எடுத்துக்கொண்டு மாற்று மின்கம்பம் அமைத்து தர வேண்டி கரையூர் தெரு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் அதிரையில் பல இடங்களில் மின் கம்பமானது பழுதடைந்த நிலையில் உள்ளது, அதனை பார்வையிட்டு கவனத்தில் கொண்டு மாற்று கம்பம் அமைக்கவேண்டும் என்றும், பல இடங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.