Home » பிரபல்யத்திற்காக வெடிகுண்டு வீசிய இந்துமக்கள் கட்சி மாநில செயலாளர் கைது…!

பிரபல்யத்திற்காக வெடிகுண்டு வீசிய இந்துமக்கள் கட்சி மாநில செயலாளர் கைது…!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:-  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சேர்ந்த காளிகுமார், இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். இவர், காரில் தனது நண்பருடன், காரில் சென்றபோது சோழவரம் சுங்கச்சாவடி அருகே ஒரு கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

தன் காரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாகவும், தன்னையும் கொல்ல முயன்றதாகவும் காளிகுமார் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சிபி சக்கரவர்த்தி கூறுகையில், ‘விளம்பரத்திற்காக தன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காளி குமார் நாடகமாடியிருக்கிறார். இதுதொடர்பாக காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

 

தமிழகத்தில் மதமோதலை உருவாக்க திட்டம் என்ற ரீதியிலும் விசாரணை நடைபெற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter