ஜி.எஸ்.டி மென்பொருளில் குறைபாடு உள்ளதை மத்திய நிதித்துறை செயலாளரே ஒப்புக்கொண்டுவிட்டார். அது நிதியம் சார்ந்தது என நினைத்து ஒதுங்கினால் ரெயில் டிக்கெட்டை புக் செய்யும்போது இதயத்துடிப்பு எகிறும் அளவிற்கு சூப்பர் ஸ்லோமோசன் ரியாக்சன் கொடுத்து பில்டப் செய்கின்றனர்.
நாளைய பயணத்திற்காக இன்று காலை டிக்கெட் புக் செய்ய முயன்றேன். ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ ஐ.ஆர்.சி.டி.சி செயலியை ஓப்பன் செய்யவே 20 நிமிடம் போராட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். (இணையதளமும் வேலை செய்யவில்லை)
பலமுறை முயற்சி செய்தும் ஜி.எஸ்.டி மென்பொருளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய முடியவில்லை என கைவிரித்துவிட்ட நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி செயலி ஐசியு வார்டில் உள்ளது. இந்த சூழலில் அதீத முக்கியத்துவம் கொண்ட மருத்துவ சீட்டிற்கான நீட் தேர்வை இவர்கள் எப்படி ஆன்லைன் மூலம் நேர்மையாக நடத்துவர்?
ஏற்கனவே இந்தியா மீது சைபர் தாக்குதலை தொடுக்க சீனாவும், பாகிஸ்தானும் துடிப்புடன் இருக்கும் சமயத்தில் மருத்துவத்திற்கான தேர்வை ஆன்லைன் மூலம் நடத்துவது என்பது அபாயகரமானது.
கொசுறு: 2017ஆம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் ஆறு முன்னணி பல்கலைக்கழகங்களின் இணையதளங்களை பாகிஸ்தான் சார்புக் குழு ஹேக் செய்தது குறிப்பிடத்தக்கது.
#NEET #Online #SayNo #TNagainstNEET