அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது.
அவ்வகையில் இன்று முதல் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த காலிறுதி ஆட்டத்தில் வேலங்குடி ப்ளூஸ் – KSC காயல்பட்டினம் அணிகள் மோதின.
ஆட்டம் ஆரம்பித்த அடுத்த சில நிமிடங்களிளையே காயல்பட்டினம் அணி தனது சாமர்த்தியமான பாஸ்களால் முதல் கோலை அடித்தது.
பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் KSC காயல்பட்டினம் அணி அடுத்த 3 கோல்களை அடித்தது.
வேலங்குடி அணிக்கு கோல் அடிப்பதற்க்கு பெனால்ட்டி ஷாட் போன்று அவ்வப்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவறவிட்டுவிட்டது.
இறுதியாக KSC காயல்பட்டினம் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் அரை இறுதி சுற்றுக்கு வேலங்குடி அணி வர முடியாதவாறு வேலி அடித்தது காயல்பட்டினம்.
நாளைய தினம் அன்னாமலை யுனிவர்சிட்டி சிதம்பரம் – கண்டனூர் அணிகள் மோதுகின்றன.