அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் C யுனைடெட் தூத்துக்குடி – ஜகன் மெமோரியல் தூத்தூர் அணியும் மோதின.
முன்னதாக நெசவுத் தெரு ஆதினத்துல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் போட்டியை துவக்கி வைத்தனர்.
முதல் கோல் அடிப்பதற்காக இரு அணியினரும் மாறி மாறி முயற்சி செய்தும் முதல் பகுதி நேர ஆட்டம் வரை பலனளிக்கவில்லை.
பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் தூத்தூர் கன்னியாகுமரி அணி முதல் கோலை அடித்தது.
தூத்துக்குடி அணி வீரர்கள் சலைக்காமல் மேற்கொண்ட முயற்ச்சியின் பலனாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தூத்துக்குடி அணி கோல் அடித்ததும் ஆட்டம் 1-1 என்ற நிலையில் சமநிலையடைந்து மேலும் சுவாரசியமானது.
இருப்பினும் முழு பகுதி நேரம் முடிந்ததால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
இந்த டை பிரேக்கரில் தூத்தூர் கன்னியாகுமரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியை அசத்தலாக வீழ்த்தியது.
கலைவாணர் 7s கண்டனூர் – தூத்தூர் கன்னியாகுமரி அணிகள் முதல் காலிறுதி போட்டியை நாளை சந்திக்கின்றனர்.