175
அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் பார்வதி, உடல் நலம் முடியாத ஏழை கூலித் தொழிலாளி ஆவார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நோய்வாய்ப்பட்டு அதிரை CBDயினரால் மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று அதிகாலை முத்துப்பேட்டை சேது சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த CBDயினர் சடலத்தை தமுமுக அவசர ஊர்தி மூலம் மீட்டு அதிரை அரசு மருத்துவமனை சவ கிடங்கிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சமபவம் குறித்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.