தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சென்னை அயனாவரத்தில் காது கேளாதா வாய் பேச முடியாத சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது உலகமுழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த அதிர்வலையில் இருந்து மீள்வதற்குள் மற்றுமொரு சிறுமிக்கு 62 வயது முதியவரால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆத்திக்குளம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரவியம் கைது போலீசாரால் கைது செய்யப்படுள்ளார்.
பக்கத்து வீட்டு சிறுமியை வீட்டில் தூக்கிவைத்து பாலியல் தொந்தரவு செய்கையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு சிறுமியைை காப்பாற்றினர்.
பொதுமக்கள் திரண்டதால் ஆத்திகுளம் அருகே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
மதுரை தல்லாகுளம் போலிஸார் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரவியத்தை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.