Home » கலைஞர் கருணாநிதி உடல்நலம்??

கலைஞர் கருணாநிதி உடல்நலம்??

0 comment

தமிழக அரசியலில் தற்போது இருக்கும் தலைவர்களில் மிக மூத்த தலைவராக திமுகவின் தலைவர் கலைஞர் இருந்து வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைச் சென்று சுவாசக்குழாய் மாற்றி நலமுடன் வீடு திரும்பினார்.

கலைஞரின் வயது நலிவின் காரணமாக காய்ச்சல் மற்றும சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை தெரிவித்தது.

இதனிடையே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து, கலைஞர் கருணாநிதி காய்ச்சல் காரணமாக ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இதனால் தற்போது கலைஞர் கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், மநிம கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ,தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் இதர அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

நலம் விசாரித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், திமுகவின் தலைவர் நலமுடன் இருக்கிறார், காய்ச்சல் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றே கூறியுள்ளனர்.

50 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவராக ஒருவரே இருப்பது மிகப் பெரும் சாதனை . அச் சாதனையை திமுக தலைவர் கலைஞர் பெற்றிருக்கிறார்.

திமுக தலைவர் நலம் பெற வேண்டும் என்று ஏராளமான திமுக தொண்டர்கள் தற்போது கோபாலபுரத்தில் கூடியுள்ளது குறிப்பிடதக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter