Home » கந்துவட்டியின் கோரப்பிடியில் ஹிஜாப்..!

கந்துவட்டியின் கோரப்பிடியில் ஹிஜாப்..!

0 comment

அன்பான சமூகமே
கவனியுங்கள் கவலை கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அவலங்கள் இதோ நம் சிந்தனைக்கு.

வட்டி என்பது இஸ்லாம் அல்லாதவருக்கு ஒரு வியாபாரம். இஸ்லாமிய மக்களுக்கு அது ஒரு கேடு.ஆகுமானதல்ல மார்க்கம் அனுமதிக்கப்பட்டதல்ல அல்ல. ஏனைய முஸ்லிம்களுக்கு நன்றாக தெரியும். தெரிந்திருந்தும் அதன் கொடுமைகள் புரிந்திருந்தும் ஒரு சில முஸ்லிம் பெண்கள் வருமையின் காரணமாக பலவித தேவையின் காரணமாக வட்டி தொழில் புரியும் நபர்களிடம் பணம் பெற்று பின்னால் சிக்கலில் மாட்டிகொள்கிறார்கள்.

இதனுடைய வேதனை என்னவென்றால் முஸ்லிம்களில் ஒரு சில ஆண்கள் சில பெண்களுக்கு வட்டிக்காரனிடம் பணம் வாங்கி தந்து கமிஷன் பெறுகிறார்கள்.

தொடர்ந்து வட்டிக்கட்ட முடியாமல் பல சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்

அதனால் பெண்களை மிரட்டுவதும் கெட்டவார்த்தைகளால் வீடுகளில் வந்து திட்டுவதும் இன்னும் படுக்கைக்கு அழைப்பதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

இதை கேட்க முடியாத நிலையில் மனம் தள்ளப்பட்டுவிட்டது.

காரணம் இயலாமை. சுயநலம் அதிகரித்துவிட்டது.

ஊரில் பைத்துல்மால், சங்கம் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் இருந்தும் தட்டிகேட்க நாதியில்லை.

அநியாயம் செய்யும் கந்துவட்டிக்காரன் மீது புகார் கூற நடவடிக்கை இல்லை. அதற்கான மனநிலையிலும் இல்லை.

குப்பைகளை சரிசெய்ய வேண்டும் என எண்ணுகிறோம் மிகப்பெரும் நோயாக மாறிவரக்கூடிய வட்டியை ஒழிக்க முன்வருவதில்லை.

ஏன் கூடாதா அல்லது முடியாதா? ஒரு சில முஸ்லிம் இயக்கங்கள் அரசியலில் வந்துவிட்டதால் மற்ற அரசியல் கட்சிகள் போலெ நடந்துக்கொண்டு கண்டும் காணாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

பைத்துல்மால் தனக்கென் ஒரு வட்டத்தை இட்டு செயல்படுகின்றன.

சங்கங்களும் தனக்கென ஒரு வரைமுறைய ஏற்படுத்திக்கொண்டு தடுக்க மறுக்கின்றன.

பணம் படைத்தவர்களாவது கமிட்டி அமைத்து அதற்கான தடுப்பனையை ஏற்படுத்துவார்கள் என எதிர்ப்பார்த்தால் வங்கியின் கணக்கை அதிகபடுத்தவே நேரம் ஒதுக்கப்படுகிறது.

இங்கே எல்லோரும் ஒவ்வொரு வகையிலும் பலஹீனப்பட்டு நிற்கிறோம்.

இதை நாம் கண்டுங்காணாமல் சென்றுவிட்டால் தீமைகள் மிகைத்து வட்டி அதிகரித்து அனைவரும் பாவச்செயலுக்கு தள்ளப்பட்டுவிடுவோம் முக்கியமாக பெண்கள் பலஹீனமாக படைக்கப்பட்டுள்ளார்கள்.

வெளியில் தெரிந்தால் மானம் பறிபோய்விடுமோ என்ற பயத்தால் யாரிடமும் சொல்லி பிரச்சினையை தீர்க்க முன் வரமாட்டார்கள்.

பல தாய்மார்கள் பாதிப்புள்ளாக்கி இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

இப்பதிவு இக்கொடுமை எல்லா ஊருக்கும் பொருந்தும். இருந்தாலும் நமதூர் அதிரையின் நிலை அறிந்தே என் பதிவு.

சிந்தித்து அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே இப்பதிவின் நோக்கம்.

தயவு செய்து முன் வாருங்கள்.

நம் சமுதாய மக்களுக்கு இதனுடைய தீமையை எடுத்துரைப்போம்.

அதிலிருந்து அவர்களை காப்போம்.

ஜியாவுதீன்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter