165
அதிரை மெயின் ரோடு அருகே அமைந்திருக்கும் பாத்திமா அன்னை கிறிஸ்தவ தேவாலயத்தின் 47 ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் (14-08-2018) அன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது.
அதன் துவக்கமாக நேற்று (15-08-2018) புதன்கிழமை தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றது.
இவ்விழாவில் பட்டுக்கோட்டை பங்கு தந்தை மற்றும் உதவி பங்குதந்தை கலந்துகொண்டார்கள்.
இதன் பின்னர் பாத்திமா அன்னை கிறித்தவ தேவாலயத்தில் இருந்து தேர் பவனி பழஞ்செட்டி தெரு, ஈசிஆர், பேரூந்து நிலையம் வழியாக மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான கிறிஸ்த்தவர்கள் கலந்து கொண்டனர்.