69
கேரள மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனிக்குழு ஒன்றை அமைக்க அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நக்யான் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய அவசர குழுவை நியமித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுமாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் முகமது பின் ரஷீத் அல் மகதூம் டுவிட்டரில் கூறும்போது, “ஐக்கிய அரபு எமிரேட்சின் வெற்றிக்கு கேரள மக்கள் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்” என்றார்.
கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.