174
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த ஏரிப்புரக்கரை ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி பள்ளி அருகே வாகனம் விபத்து ஏற்பட்டது.
தஞ்சையை சார்ந்த தமிழ்மாறன் என்பவர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இறால் பண்ணையை பார்வையிடுவதற்காக இரவு 11 மணியளவில் வந்துள்ளார்.மல்லிப்பட்டினம் செல்லும் சாலையில் எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லைக் கல்லில் வாகனத்தின் பின்புறம் ஏறியதால் இரண்டு சக்கரமும் தனியே விழுந்துள்ளது.
இதில் வாகனத்தை ஓட்டிய தமிழ்மாறன் எந்தவித காயமின்றி உயிர் தப்பினார்.இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.