Home » செப்டம்பர் 10 முழு அடைப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியது திமுக…..!

செப்டம்பர் 10 முழு அடைப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியது திமுக…..!

by admin
0 comment

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்றது. திமுக தலைவராக மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் தலைமையில் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டமாகும்.இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்பட்டு அவர்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில்., ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை,செப் 10ம் தேதி முழு அடைப்பு உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரங்கள் பின்வருமாறு.

தமிழகத்தை காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்.

அதிமுக-வின் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.

வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் வழிமுறையை பின்பற்றுவோம்.

கடைமடைக்கு செல்லாமல் காவிரி நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து செப்டம்பர் 10-ஆம் நாள் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள அமைச்சர், டிஜிபியை பதவி நீக்க வேண்டும்.

அதிமுக அரசைக் கண்டித்து செப்டம்பர் 18-ஆம் நாள் தமிழகம் முழுவதும் திமுக போராட்டம் நடத்தும்.

ஆகிய 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter