179
அதிரையில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற லாரி ஒன்று நசுவினி ஆறு அருகே விபத்துக்குள்ளாகி உள்ளது.
இவ்வாகனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட வாகனமாகும். இந்த விபத்தினால் அதிரையில் இருந்து தம்பிக்கோட்டை செல்லும் உயரழுத்த மின் கம்பி மிகவும் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என விபரம் தெரியவில்லை, இந்த லாரியின் ஒட்டுனர் என்ன ஆனார் என்ற தகவலும் இது வரை கிடைக்கவில்லை.
அதிரை காவல் சரகத்திற்க்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இவ்விபத்து குறித்த தகவலும் காவல் நிலையத்தில் இல்லை .