அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கடைத்தெருவிற்கு அருகில் உள்ள மழை நீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற ம் 90.4 கோரிக்கை. அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில்,கடைத்தெருவிலிருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையை பொதுமக்கள், மாணவ, மாணவியர், வியாபாரிகள், பேருந்து நிலையம் செல்லும் பயணிகள், தொழுகைக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில் மருந்தகங்கள், வங்கி, மீன் மார்க்கெட், உணவு விடுதிகள், கடைகள், வழிபாட்டு தலங்கள், ஆகியவை உள்ளன. இச்சாலையில் ஓரத்தில் உள்ள மழை நீர் வடிகாலில் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் சேர்ந்து அடைபட்டுவருவதால் ஸ்டேட் வங்கி அருகில் கழிவு நீர் சாலைகளில் ஓடி வருகிறது. இதனால் சாலை சேதமடைவதுவுடன், கழிவு நீரால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தொழுகைக்கு செல்வோரின் உடல் மற்றும் ஆடைகள் மாசு பட்டு வருகிறது. எனவே உடனடியாக அதிராம்பட்டினம் பேரூராட்சி தற்காலிகமாக இந்த பகுதியில் உள்ள கால்வாயில் சேர்ந்துள்ள சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். வளர்ந்து வரும் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கில் கொண்டு சாலையின் இருபுறமும் அகலமான, பாதுகாப்பான, கான்கிரீட்டால் ஆன, மூடப்பட்ட, மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைக்க வேண்டும் என அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் கோரிக்கை மனு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
More like this
அதிரை: புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி மாதிரிகள் சேகரிப்பு!
அதிராம்பட்டினத்தை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் குளத்தில் ஆண் குழந்தை சடலம் ஒன்று மிதப்பதாக கடந்த மாதம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின்...
அதிரை: பசி போக்கும் திட்டத்தின் கீழ் 100 நபர்களுக்கு பிரியாணி வழங்கிய...
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க ஹானஸ்ட் சார்பாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது, அதன்படி இன்று மதியம் அதிராம்பட்டினம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சுமார்...
சவுதி அரேபியா யான்புவில் IWF-ன் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்., திரளான தமிழர்கள்...
சவூதி அரேபியா யான்பு பகுதியில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டலம் சார்பில் பலத் அல்ஹிக்கி ஹோட்டலில் நேற்று(26/09/2024) வியாழக்கிழமை இரவு...