151
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்ற லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியது.
இந்த விமானத்தில் விமான பயணித்த ஊழியர்கள் உட்பட 188 பேரின் நிலைமை என்ன ஆனது என்ற எந்தத் தகவலும் இல்லை.
அவர்களின் நிலை என்ன என்பது குறித்து இந்தோனேசிய அரசோ விமான நிறுவனமோ எந்த தகவலும் தெரிவிக்க வில்லை.
விமானம் நொறுங்கி விழுந்ததால் அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.