145
அதிராம்பட்டினம் பலஞ்செட்டி தெருவிற்கு அருகில் உள்ள சுப்ரமணியன் கோவில் தெருவில் இன்று (30.10.2018) அதிரை பேரூராட்சி சார்பாக மழைநீர் செல்லும் வடிகால் தூர்வாரும் பணி நடைப்பெற்றது.
தற்பொழுது அதிரையில் பரவி வரும் நோயை தடுக்கவும், ஊரை தூய்மையாக்கவும் அதிரை மக்கள் சார்பாக பேரூராட்சிக்கு மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அதிரையில் பல இடங்களில் உள்ள மழைநீர் செல்லும் வடிகால்கள் தூர்வாரப்படுகிறது.
இந்நிலையில் சுப்ரமணியன் கோவில் தெருவில் JCB மூலம் மழைநீர் செல்லும் வடிகால் தூர்வாரப்பட்டது. இதை அதிமுக அதிரை நகர துணைத்தலைவர் பிச்சை அவர்கள் நேரில் நின்று பார்வையிட்டார்.