தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த கேப்டன் என்று எங்களால் அன்புடன் அழைக்கக்கூடிய எம்.எஸ் முஹம்மது மன்சூர் (வயது 60). 25 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதியில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக் டிசைனராக பணியாற்றி வந்தார். தற்போது பணி ஓய்வு பெற்று தாயகம் திரும்ப உள்ளார்.
இந்நிலையில், இவருக்கு ரியாத் வாழ் அதிரை மக்கள் சார்பில் வழியனுப்பி வைக்கும் விதமாக சந்திப்பு நிகழ்ச்சி வாதி நிமர் பார்க்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவிற்கு, அதிரை பைத்துல்மால் ரியாத் கிளைத் தலைவர் எஸ்.சரபுதீன் தலைமை வகித்தார். ரியாத் வாழ் சமூக ஆர்வலர்கள் அபூ பக்கர், அகமது ஜலீல், நிஜாமுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், தாயகம் திரும்பும் எம்.எஸ் அகமது மன்சூர் அவர்களின் பல்வேறு சமூகப் பணியைப் பாராட்டி சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முடிவில், எம்.எஸ் அகமது மன்சூர் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ரியாத் வாழ் அதிரை பிரமுகர்கள் பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது.