தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள சேண்டாக்கோட்டை அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.
இன்று காலை முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டைய நோக்கி சென்ற வாகனமும், பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபருக்கு பலத்த காயம் எற்பட்டு சிகிச்சைக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.