மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த விவசாயி சஞ்சய் சாதே, தான் விளைவித்த 750 கிலோ வெங்காயத்தை நிபாட் நகரில் உள்ள மொத்த விற்பனைச் சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு கிலோ வெங்காயம் 1.40 ரூபாய்க்கு மட்டுமே விலைபோயுள்ளது.
மிகவும் ஆத்திரமுற்ற விவசாயி சஞ்சய் சாதே, வெங்காயம் விற்ற பணம் ரூபாய் 1,064 மொத்தத்தையும் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு மணி ஆர்டராக அனுப்பி வைத்தார். அப்படியாவது மத்திய அரசு தன்னைப்போல விவசாயிகளின் வேதனைகளைப் புரிந்துகொள்ளும் என எண்ணியே இவ்வாறு செய்திருக்கிறார் அந்த விவசாயி.