அதிராம்பட்டினம் ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் ஏராளமான வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்களை எதிர் கால சிறந்த வீரர்களாக வார்த்தெடுக்கும் பணியில் AFFA குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவ்வகையில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் பல்வேறு ஊர்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மன்னார்குடி அணிக்காக நட்பு ரீதியில் விளையாட சென்ற நமதூர் ஆக்கிஃப் மற்றும் அப்துல்லா ஆகியோர் விளையாடி பெஸ்ட் அகாடமி சார்பில் 14 வயதுக்கு கிலுள்ள பிரிவின்படி சிறந்த ஆட்ட நாயகன் விருதை வழங்கியுள்ளது.
இவ்விருதை பெற்ற இவர்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடி சுழற்க்கோப்பைகளை தங்களின் அணிக்கு பெற்றுதந்த பெருமைக்கு உரியவர்களாவர்.