டெல்டா மாவட்டங்களை கோர தாண்டவம் ஆடியே கஜா புயலால் விவசாயிகள் ஏழைகள் பெரும் அளவில் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இவர்களை மீட்டெடுக்க தன்னார்வ அமைப்புகள் முன்வந்து நிவாரண முதல் கட்ட உதவி செய்து வந்தனர்.
தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10,000 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆனால், இதுவரைக்கும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு மறுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு கூட முழு நிவாரணம் வழங்காமல் ஏழை மக்களை வஞ்சித்து வருகிறது என்று பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகர் பகுதியில் அரசு இதுவரைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவரணத்தொகை வழங்காதத்தை கண்டித்து இன்று (29/12/2018) சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டு கொண்டு இறந்த இரு பெண் திடீர் மயங்கி விழுந்ததால் சற்று பரபரப்பு நிலவியது.
மயங்கி விழுந்த இரு பெண்களை அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.