Home » சுகாதாரத்தை பேண முன்வருமா அதிரை எவர் கோல்டு நிறுவனம்..!!

சுகாதாரத்தை பேண முன்வருமா அதிரை எவர் கோல்டு நிறுவனம்..!!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் எவர் கோல்டு காம்ப்ளக்சில்(EVER GOLD COMLEX) 100க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களாக எவர் கோல்டு காம்ப்ளெக்ஸ் பின்புறம் வாகனம் நிறுத்தும் இடத்தில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்கின்றது.

இதனால் புழுக்கள் மற்றும் விஷ கொசுக்கள் உற்பத்தியாவதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நிறுவனத்திடம் புகார் செய்து 2 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதால் காற்றுக்காக ஜன்னல்களை கூட திறக்க முடியாத அவல நிலையில் உள்ளனர்.

நிர்வாகத்திடம் கூறினால் மரியாதையின்றி தரம் குறைவாக பேசுகின்றனர் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கூடிய விரைவில் இந்த கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்யுமாறு எவர் கோல்டு காம்ப்ளக்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter