Home » Google Pay, PayTM, PhonePe செயலிகளை பயன்படுத்துபவரா நீங்கள்..? உஷார் !

Google Pay, PayTM, PhonePe செயலிகளை பயன்படுத்துபவரா நீங்கள்..? உஷார் !

0 comment

கூகுள் பே, பேடிஎம், போன் பே மற்றும் அரசு , தனியார் வங்கிகளின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துபவர்களின் ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டால் உடனடியாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்தாலும், பணத்தை எளிதாக எடுக்கலாம்.

எனவே இது போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் ஸ்மார்ட்போன்கள் தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்குச் சென்று வங்கிக் கணக்கை உடனடியாக முடக்குமாறு காவல் துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

வங்கி கணக்கை முடக்காவிட்டால் ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிலிருந்து உங்களுக்கே தெரியாமல் பணத்தை திருடுப் போக வாய்ப்புகள் உள்ளது.

அலட்சியம் காட்டும் வங்கி அதிகாரிகள் மீது புகார் அளித்தால் உடனடியாக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் கூறுகின்றனர்.

இன்றைய கால சூழ்நிலையில் சாப்பிடுவது, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்வது, வீட்டிலிருந்தபடியே ரீசார்ஜ் செய்வது, வழி தெரியாவிட்டால் ஸ்மார்ட்போன் மேப் மூலம் வழிகளைத் தேடுவது என அனைத்தும் ஸ்மார்ட்போன்களிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர்.

இந்த ஸ்மார்ட்போன் செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வது என்பது அன்மை காலமாக மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

உதாரணமாகக் கூகுள் பே என்ற என்ற செயலி மூலம் பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றவருக்கு நொடிகளில் அனுப்பி விடலாம். இதற்கு வங்கி கணக்கில் உள்ள மொபைல் எண் கட்டாயம்.

இதுபோன்ற செயலிகளை ஸ்மர்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யும் பொழுது, அது கேட்கக்கூடிய வங்கி எண் , ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை முதலில் நாம் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் நாம் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் அந்தச் செயலிகளில் சேமிக்கப்படும். ஒருமுறை அளிக்கப்படும் இந்தத் தகவல்கள் அனைத்தும் செயலிகளில்
நிரந்தரமாகச் சேமிக்கப்படும்.

இதே முறையில்தான் நாம் பயன்படுத்தக்கூடிய பிரபலமான அரசு மற்றும் தனியார் வங்கிகளில் செயலிகளும் செயல்படுகிறது. ஒருவேளை நமது ஸ்மார்ட் போன்கள் தொலைந்து விட்டால் அல்லது பறிக்கப்பட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அந்த வங்கி செயலி மூலம் எளிதாக உங்கள் பணத்தை எடுத்துவிட முடியும் என்றும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கூறுகின்றனர்.

ஒருவேளை பணம் திருடும் கும்பலிடம் உங்களுடைய ஸ்மார்ட்போன் கிடைத்தால், உங்களுடைய மொபைல் போனில் உள்ள வங்கிக் கணக்கு செயலியில், உங்கள் வங்கி கணக்கின் கடன் அட்டையில் உள்ள கடைசி ஆறு இலக்க எண், மற்றும் உங்களுடைய அட்டைக் காலாவதியாகும் மாதம் மற்றும் வருடத்தைக் குறிப்பிட்டால் போதும் உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் பணத்தை மர்ம கும்பல் திருட முடியும்.

எனவே வங்கி தொடர்பான பரிசோதனைகள் மற்றும் நடவடிக்கைகளை ஸ்மார்ட்போன்களில் கையாளும் போது மிக கவனமாக இருக்கவேண்டும். வங்கிக் கணக்கு தொடர்பான புதிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்து அதில் வங்கி கணக்கு விவரங்களைக் கொடுக்கும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter