Home » தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் இடமாற்றம் !

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் இடமாற்றம் !

0 comment

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக டி. செந்தில்குமார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தஞ்சை மாவட்டத்தில் திறம்பட பணியாற்றி மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற இவர், தற்போது திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :

தமிழகத்தில் 13 தஞ்சை எஸ்.பி.
செந்தில்குமார், ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 11வது பட்டாலியன் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11வது பட்டாலியன் கமாண்டராக பணியாற்றி வந்த மகேஸ்வரன் தஞ்சை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி எஸ்.பி. பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி எஸ்.பியாக மாற்றப்பட்டார். கிருஷ்ணகிரி எஸ்.பி. மகேஸ்குமார், தருமபுரி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பி. ஜார்ஜி ஜார்ஜ், சென்னை மாநகர போக்குவரத்து காவல் பிரிவின் துணை ஆணையராக (மேற்கு) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்படி சென்னை போக்குவரத்து காவல் பிரிவில் துணை ஆணையராக (மேற்கு ) பணியாற்றி வந்த தீபா கனிகர், சேலம் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தவிர மற்றவர்கள் சென்னை மாநகரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் 2வது வாரம் வெளியாகும். அதன் பிறகு அதிகாரிகளை மாற்ற முடியாது என்பதால் இப்போதே அரசு தனக்கு வேண்டிய அதிகாரிகளை முக்கிய இடங்களில் பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter