அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்திய கடலோர சுற்றுப்புறங்களில் இயற்கை (கஜா) பேரழிவுகள் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று வியாழக்கிழமை நடைப்பெற்றது.
இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் துவக்கிவைத்து உரையாற்றினார். அவர் கஜா புயலில் பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் செய்த நிவாரப்பணிகளை எடுத்துரைத்தார்.
தூத்தூர் ஜெயின்ட் ஜுட்ஸ் கல்லூரியின் முன்னாள் விலங்கியல் துறைத்தலைவர், கடல் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் பேராசிரியர் கா. வறீதையா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கஜா புயல் கரையைக் கடக்கும்போது இயற்கை வளங்களுக்கு, உயிரினங்களுக்கு, மக்களுக்கு, உடைமைகளுக்கு, கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளை மீனவர்கள், பொதுமக்கள், களத்தில் தொண்டாற்றியவர்கள், நிபுணர்களின் கருத்துக்களை ஒலி ஒளியாக்கத்தில் காட்சிப்படுத்தியும் மற்றும் ஆவணப்படமாகவும் தொகுத்தும் அரசாங்கத்திடம் கொடுத்தால், எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடர்களை எளிதாக தவிர்க்கவும் நிவாரணப்பணிகளை முழுமையாக விரைவில் முடிக்க முடியம் எனக்கூறினார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் கஜா சூறாவளிப் புயல் ஏற்படுத்திய பேரழிவுகளையும், தாங்கள் பட்ட கஷ்டங்களையம், தாங்கள் செய்த நிவாரப்பணிகளையும், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலமாக வந்த நிவாரண உதவிகளையும் எடுத்துக்கூறினார்கள். மேலும் தங்களுக்கு உதவியதற்க்காக கல்லூரியின் பேராசிரியர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
கஜாப்புயளுக்கு கொடுத்த எச்சரிக்கையின்படி கடலோர கிராமத்தில் தங்கியிருந்தவர்கள், உடமைகளை பாதுகாத்து நிவாரண முகாமில் தாங்காத காரணத்தால், புயல் அடித்த போது அதி வேகமாக வீசிய புயல் காற்று வீட்டுக்குள் புகுந்தாலும், மரம் வீழ்ந்தாலும், கோர சாவிலிருந்து மக்கள் தப்பித்ததாகவும், பின்பு நீர் உணவின்றி தவித்து வந்ததாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகளின் மூலம் அவர்களின் வாழ்வாதார தேவைகளுக்கு உதவியதாக பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், பேசினார்.
முன்னதாக, திட்ட ஒருங்கிணைப்பாளர் விலங்கியல் துறைப் பேராசிரியர் அ. அம்சத் கருத்தரங்கு ஏற்பாட்டினை செய்திருந்தார். அவர் வரவேற்புரையாற்றி, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. முத்துக்குமரவேல் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி முகாமில், கல்லூரி துணை முதல்வர் முனைவர் எம். முகமது முகைதீன், துறைத்தலைவர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி பேராசிரியர் எஸ்.ரவீந்திரன், பேராசிரியர்கள் அ. கலீல் ரஹுமான், வி. கானபிரியா, ஏ. மஹாராஜன், ஜெ. சுகுமாரன், என். வசந்தி போன்ற பேராசிரியர்கள் மற்றும் அதிராம்பட்டினம், கரையூர் தெரு, ஏரிபுறக்கரை, கிழத்தோட்டம், மல்லிப்பட்டினம், சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.