Wednesday, September 18, 2024

தினமும் ஒரு தகவல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் – இயற்கை மருத்துவம்.

முட்டைக்கோஸ் என்றதுமே தலைதெறித்து ஓடுவோர் பலர் உண்டு. ஆனால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் நல்லது என்பது தெரியுமா? குறிப்பாக பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதனால் இந்த காய்கறி கொண்டு செய்யப்படும் ஜூஸைக் குடித்தால், உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அல்சர் :-

முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும்.

புற்றுநோய் :-

முட்டைக்கோஸ் ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள சல்போராபேன் தான் காரணம். இது தான் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஐசோசையனேட் நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் நல்ல பாதுகாப்பை வழங்கும்.

கண்புரை :-

கண்புரை நீடித்தால், அது பார்வையை இழக்கச் செய்யும். இந்த கண்புரையைப் போக்க அறுவரை சிகிச்சை மட்டும் தான் சிறந்த வழி அல்ல. தினமும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவதன் மூலமும் கண்புரையைத் தடுக்கலாம்.

சரும பிரச்சனைகள் :-

முட்டைக்கோஸ் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இதனால் இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, சரும பிரச்சனைகள் விரைவில் குணமாக உதவும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும் :-

முட்டைக்கோஸ் ஜூஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆய்வுகளிலும் முட்டைக்கோஸ் ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால், அதில் உள்ள ஹிஸ்டிடைன் என்னும் பொருள் நோய்க்கிருமிகளை வலிமையுடன் எதிர்த்துப் போராடி நோய்கள் அண்டுவதைத் தடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மூளைக்கு நல்லது :-

முட்டைக்கோஸ் ஜூஸ் மூளைக்கு நல்லது. முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே, ஆந்தோசையனின், மூளையின் செயல்பாட்டை கூர்மையாக்கி, ஒரு செயலில் மனதை ஒருமுகப்படுத்த உதவும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

உடல் எடை குறையும் :-

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடித்து வர, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைய உதவும். முக்கியமாக முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு.

கொலஸ்ட்ரால் குறையும் :-

முட்டைக்கோஸ் ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஜப்பானிய ஆய்வு ஒன்றிலும், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கடுமையாக குறைந்திருப்பது தெரிய வந்தது.

கல்லீரல் சுத்தமாகும் :-

முட்டைக்கோஸ் ஜூஸில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. ஆகவே இதனை அவ்வப்போது பருகி வர கல்லீரலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு, கல்லீரல் சுத்தமாகி, அதன் செயல்பாடும் மேம்படும்.

இரத்த சோகை :-

முட்டைக்கோஸ் ஜூஸில் ஃபோலிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இரத்த சோகை என்று வரும் போது புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸைப் பருகி வர விரைவில் குணமாகும்.

ஜூஸ் செய்யும் முறை

பாதி முட்டைக்கோஸை எடுத்து சுடுநீரில் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.  பின் அதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். கீழே சில முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பு 1 :-

முட்டைக்கோஸை ஜூஸ் போட பயன்படுத்தும் முன், எப்போதும் அதனை உப்பு கலந்த நீரிலோ, சுடுநீரிலோ அல்லது வினிகரிலோ 30 நிமிடம் ஊற வைத்துக் கொண்டால், அதில் உள்ள புழுக்கள் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுமையாக வெளியேறும்.

குறிப்பு 2 :-

முட்டைக்கோஸ் ஜூஸ் மூலம் சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால், அதனை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும்.

குறிப்பு 3 :-

ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக இதனைப் பருகக்கூடாது. ஒரு நாளைக்கு 1 டம்ளர் மட்டும் போதுமானது. அதிலும் கால் டம்ளர் முட்டைக்கோஸ் ஜூஸ் என்றால், அத்துடன் முக்கால் டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு 4 :-

இந்த ஜூஸில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், அதன் தன்மை குறைந்துவிடும்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை GHல் 24மணி நேர அவசர சிகிச்சை பிரிவு விரைவில் துவக்கம்...

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறிப்பாக கற்பினி பெண்கள் அதிகளவில் இம் மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...

அதிரை கடற்கரைத்தெருவில் புட்பல்ஸ் தெரபி இலவச மருத்துவ முகாம்!(படங்கள்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் புட்பல்ஸ்(Foot Pulse Therapy) தெரபி என்னும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று தொடங்கியுள்ளது. அதிராம்பட்டினம் கடற்கரைத் ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா...
spot_imgspot_imgspot_imgspot_img